25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

உள்நாட்டு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவீர் முதலாளிகளுக்கு மனித வள அமைச்சு வலியுறுத்து

🔥 Views : 6
👁 Reading Now : 40

🔊To listen to this news in Tamil, Please select the text.

வேலை வாய்ப்பு வழங்குவதில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும்படி முதலாளிகளை மனித வள அமைச்சர் வி. சிவக்குமார் கேட்டுக்கொண்டார். நாட்டில் வேலையின்மை விகிதம் குறைப்பு இலக்கை அடைய மற்றும் வாழ்வாதாரத்தின் மூலம் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அதிகமான உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் முதலாளிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமான சார்ந்திருப்பதை தவிர்த்துக்கொண்டு உள்நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பதில் முதலாளிகள் முன்னுரிமை கொடுப்பதற்கு முன்வரவேண்டுமென பினாங்கு பட்டர்வொர்த்தில் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சியை இன்று அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தபோது சிவக்குமார் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் ஆகியோர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles