25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்யும்படி மாணவர்களுக்கு பயிற்சியளிப்பது தவறு இல்லை

🔥 Views : 8
👁 Reading Now : 34

🔊To listen to this news in Tamil, Please select the text.

கழிவறைகளை சுத்தம் செய்யும்படி பள்ளிப் பிள்ளைகளுக்கு பயிற்சியளிப்பதில் எந்தவொரு தவறும் இல்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். கழிவறைகள் தூய்மையாவும் பொருத்தமான சூழ்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவற்றை கழுவும்படி பள்ளிப் பிள்ளைக்ளுக்கு கற்றுத் தரவேண்டும். 1986 ஆம் ஆண்டு தாம் கல்வி அமைச்சராக இருந்தபோது கழிவறைகளை சுத்தம் செய்யும்படி பள்ளிப் பிள்ளைகள் கேட்டுக்கொண்டபோது அற்கு பெற்றோர்களிடமிருந்து எதிர்ப்பு வந்ததையும் அன்வார் சுட்டிக்காட்டினார். கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் . தாம் கல்வி அமைச்சராக இருந்தபோது கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்கும்படி அனைத்து பள்ளகளுக்கும் பணித்ததாக அன்வார் கூறினார்.

எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு படிக்கத்தான அனுப்புகிறோம் , கழிவறையை சுத்தப்படுத்த அல்ல என தொழில்துறையைச் சேர்ந்த உயர்மட்ட பெற்றோர்கள் தமக்கு டெலிகிரேம் மூலம் கேட்டுக்கொண்டதையும் அன்வார் தெரிவித்தார். . இதனிடையே பல பள்ளிககளில் கழிவறைகள் உடைந்திருப்பதால் அவற்றை பழழ பார்ப்பது மற்றும் சீரமைப்பதில் கவனம் செலுத்தும்படி கல்வி அமைச்சர் Fadhina sidek கை தாம் பணித்திருப்பதாகவும் அன்வார் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles