25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

குறைந்த சம்பளமும் வேலையில்லா திண்டாட்டமும் இளையோர் திவாலாகுவற்கு காரணமாகும் பொருளாதார நிபுணர் தகவல்

🔥 Views : 7
👁 Reading Now : 54

🔊To listen to this news in Tamil, Please select the text.

வேலையில்லா திண்டாட்டமும், குறைந்த சம்பளமும் இன்றைய இளைஞர்கள் திவாலில் சிக்குவதற்கு முக்கிய காரணம் என மலேசிய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான Geoffrey Williams தெரிவித்திருக்கிறார். 25 முதல் 34 வயதுடைய 32 விழுக்காட்டினர் வேலையில்லாமல் இருந்ததாக கடந்த ஆண்டின் வேலை சந்தையின் நான்காவது காலாண்டு அறிக்கையில் தெரியவருவதாக அவர் கூறினார். 25 முதல் 34 வயதுடைய பிரிவினர்களில் அவர்களது சராசரி வருமானம் 2,053 ரிங்கிட்டுக்கும் குறைவாகும் என வில்லியம் சுட்டிக்காட்டினார். குறைந்த வருமானம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம்தான் இன்றைய இளம் தலைமுறையினர் மட்டுமின்றி வருமானம் குறைந்த பிரிவினரின் பிரச்சனையாக இருப்பதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles