
🔊To listen to this news in Tamil, Please select the text.
தமது கணவர் பாலச்சந்திரன் செல்வ ரத்தினத்திற்கு திடிரென இருதய வலி ஏற்பட்டதால் உடனடினயாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டதால் வேறு வழியின்றி பிரிக்பீல்ட்ஸ் CVSKL தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானதாக சபாய் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி தெரிவித்தார்.
இந்த வேளையில் தமது கணவரின் நிலை கேட்டு உடனடியாக மருத்துவமனைக்கு வருகை புரிந்து தமது கணவரின் நலனை விசாரித்ததோடு தக்க சமயத்தில் உதவி செய்த ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு திருமதி கமாட்சி தமது நெகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.
தன் கணவரை நேரில் சந்திக்க சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவனும் வந்திருந்ததாக காமாட்சி தெரிவித்தார்.
இந்நிலையில், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் தற்போது தமது கணவரின் நிலை சீராக இருப்பதாக கூறியுள்ள காமாட்சி, திருமண நிகழ்வில் கலந்துக் கொள்ள தலைநகர் பிரிக்பீல்ட்ஸ்க்கு வந்தபோது தனது கணவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார் .
