28.5 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

5 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் லஞ்சம் வாக்கியதாக நம்பப்படும் குடிநுழைவு அதிகாரி கைது

🔥 Views : 14
👁 Reading Now : 46

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஐந்து லட்சம் ரிங்கிட்டிற்கும் மேலாக லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் குடிநுழைவு அதிகாரி ஒருவரை விசாரணைக்கு உதவும் பொருட்டு MACC யின் Pahang கிளை கைது செய்துள்ளது. நேற்று மாலை Kuantan னிலுள்ள
MACC அலுவலகத்தில் வாக்குமூலம் கொடுத்த பின்னர் 37 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக MACC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 17ஆவது விதியின் கீழ் அந்த நபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த சந்தேகப் பேர்வழி மாதந்தேறும் 300 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட்வரை 2018ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை பொழுதுபோக்கு மையங்கள், உடம்புப் பிடி நிலையங்கள் , பழத் தோட்டங்களின் உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த கைது நடவடிக்கையை Pahan MACC இயக்குனர்
Hairuzam Amin Mamim உறுதிப்படுத்தியதோடு இது குறித்த மேல் விவரங்களை வெளியிட மறுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles