
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளத்தை வழங்கும்படி அனைத்து முதலாளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை , சம்பளம் இழுத்தடிக்கும் படுகிறது என்ற புகார்கள் இனியும் வராமல் தடுக்க கண்டிப்பாக முதலாளிகள் சம்பளத்தை வங்கியில் போட வேண்டும் என அவர் லியுறுத்தினார். இன்று தொழில் நீதிமன்றத்திற்கு வருகை புரிந்த சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது இத்தகவலை வெளியிட்டார். தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் கிடைத்திருக்கிறது என்பதை இதன் மூலம் உறுதிபடுத்த முடியும் என அவர் கூறினார்.
1995 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் சட்டத்தின் 25 பிரிவு (ஏ) கீழ் முதலாளிகள் கண்டிப்பாக தங்கள் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.இதை மீறும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுத்து 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார். தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாதது மற்றும் கட்டாய தொழிலார் விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது என்று அவர் சொன்னார். இது நாட்டின் தோற்றத்தை பாதிக்கும் என்பதால் அனைத்து முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளத்தை வழங்க வேண்டும் என்றார்.
