25.5 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகை – அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார்

🔥 Views : 30
👁 Reading Now : 20

🔊To listen to this news in Tamil, Please select the text.

உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21ம் தேதி அமெரிக்கா வருகிறார். வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்கிறார். அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles