
🔊To listen to this news in Tamil, Please select the text.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் அவதூறுகளையும் தாண்டி அடுத்த பொதுத் தேர்தல் வரை தனது அரசாங்கம் இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியுடன் கூறினார்.
கடந்த தேர்தலுக்கு பிறகு நாட்டில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்துள்ளது.
இந்த அரசாங்கத்திற்கு பிரதமராக நான் பொறுப்பேற்று எனது பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
இந்நிலையில் தேசியக் கூட்டணி என்னை எவ்வளவு அவதூறு செய்தாலும், கேலி செய்தாலும் அதற்காக நான் கவலைப்படமாட்டேன். என்னுடைய பிரதமர் பொறுப்பை தற்காப்பேன். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
அதே வேளையில் தேசியக் கூட்டணி என்னை வீழ்த்த வேண்டும் என்றால் அதற்கு நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
பெலாங்காய் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ அமிசாருக்கு ஆதரவாக பிரதமர் பிரச்சாரம் செய்தார்.
அந்த பிரச்சார மேடையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
