26.3 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

அரசாங்கத்தில் பாஸ் கட்சியை ஏற்க அன்வார் தயார்?; கிட் சியாங் வரவேற்பு

🔥 Views : 37
👁 Reading Now : 59

🔊To listen to this news in Tamil, Please select the text.

அண்மையில் Time சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் பாஸ் கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் இணையும் சாத்தியத்தை மறுக்கவில்லை. கொள்கை தொடர்பான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அது சாத்தியம் என கூறியிருந்தார்.

தாம் ஏற்கனவே கடந்த மே மாதத்தில் இது போன்ற கருத்தை வெளியிட்டதன் அடிப்படையில் அதை வரவேற்பதாக DAP-யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

நான் அப்போது கூறிய போது பலர் மேலோட்டமான நிலைத்தன்மைக்காக கொள்கைகளை விட்டுக் கொடுக்கிறேனா என கேள்வி எழுப்பினர். பாஸ் கட்சி மலேசியாவின் எதிர்கால கருதி உண்மை போக்குடன் செயல்பட்டால் அக்கட்சியை ஏற்பதை வரவேற்கிறேன் என்றார் கிட் சியாங். ஆனால் அதற்கு முன்னதாக சில நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.

முதலில் DAP மீது ஹடி அவாங் வைத்த கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

அடுத்ததாக இன சமய பிரச்சனைகளை கிளப்புவதை நிறுத்த வேண்டும். தொடர்ந்து அனைத்துலக அளவில் மலேசியா இன சமய கலாச்சார நல்லிணக்கதை பிரதிபலிக்கும் உதாரண நாடாக காட்டுவதற்கு முன் வர வேண்டும்.

இவற்றை பாஸ் கட்சி செய்யுமா என கிட் சியாங் கேள்வி எழுப்பினார்.

ஆறு மாநில தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் முடிந்த நிலையில் நாட்டின் அரசியல் நிலைத்தன்மை வலுப்பெறுவதோடு மலேசியா மீண்டும் புத்தெழுச்சி பெறும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles