
🔊To listen to this news in Tamil, Please select the text.
மக்களவை விவாதங்களை நேரடியாக ஒளிபரப்ப நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துல் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொலைபேசிகளை மேஜையில் வைத்து இங்கு நடக்கும் விவாதங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த நடவடிக்கையை நான் நேரடியாக கவனித்தேன்.
ஆகையால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக அனுமதி மறுக்கப்படுகிறது.
ஏனென்றால் உங்கள் பார்வையாளர்களிடம் நீங்கள் பேசும் தருணத்தில், உங்கள் கவனம் மக்களவையில் என்ன நடக்கிறது என்பதில் இருக்காது.
இதன் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்படுகிறது என்று ஜொஹாரி அப்துல் கூறினார்.
