25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மலாய் மொழியில் ஆர்டர் செய்யுங்கள்; வாடிக்கையாளரிடம் காட்டமாக பேசிய ஸ்டார்பக்ஸ் ஊழியர்

🔥 Views : 10
👁 Reading Now : 47

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருக்கும் ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடையில் காப்பி ஆர்டர் செய்தபோது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தன்னிடம் காட்டமாக நடந்து கொண்டதாக பெண் வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காப்பி ஆர்டர் செய்ய ஆங்கிலத்தில் ஆர்டர் செய்தேன், அதற்கு ‘Cakap melayu je lah’ அதாவது மலாய் மொழியிலேயே பேசுங்கள் என காட்டமாக பதிலளித்தார் அந்த ஊழியர்.
இந்த பதிவு வைரலாகி, பலரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அது சாதரணமாக கூறியிருக்கலாம். ஏன் முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டு கடினமாக பேச வேண்டும்? சேவைத்துறையின் முகப்பிடத்தில் பணியாற்றும்போது இனிய வரவேற்பு முக்கியமல்லவா, ஏன் ஆங்கிலத்தில் ஆர்டர் செய்தததில் தவறு என்ன? அவருக்கு புரியவில்லை என்றால் மீண்டும் கேட்டிருக்கலாம் போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர் வலைத்தளவாசிகள்.

இதனிடையே, இந்த பதிவிற்கு பதிலளித்துள்ளது ஸ்டார்பக்ஸ் நிறுவனம். உங்களின் கருத்துக்கு நன்றி. இந்த விவகாரத்தை நாங்கள் நல்ல முறையில் கையாள விரும்புகிறோம். உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை எங்களுக்கு தெளிவாக விளக்குங்கள் என அந்நிறுவனம் பதில் பதிவை வெளியிட்டிருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles