
🔊To listen to this news in Tamil, Please select the text.
பணியிடத்தில் தொழிலாளர்கள் மீது பாகுபாடு காட்டுவதை மனிதவள அமைச்சு மிகவும் கடுமையாக கருதுகிறது.
இந்த குற்றத்தை புரியும் முதலாளிகளுக்கு 50,000 வெள்ளிக்கு மேல் அபராதம் விதிக்கப்படலாம் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் இன்று நாடாளுமன்றத்தில் எச்சரித்தார். குறிப்பாக உடல் அல்லது மனநல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதை அனுமதிக்க முடியாது. பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக வேலை வேலை சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பு தொடர்பான பாகுபாடு சிக்கல்கள் தொடர்பான எந்தவொரு புகாரையும் கேட்டு முடிவெடுக்க வேலை வாய்ப்புச் சட்டத்தில் அதிகாரம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்
