
🔊To listen to this news in Tamil, Please select the text.
பத்துமலை வட்டாரத்தில் சட்டவிரோதமாக கோழிகளை பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் திடீர் பரிசோதனை நடத்தியதில் அவை பல்வேறு விதிமுறைகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டது. இன்று அதிகாலை 2 மணியளவில் கோலாலம்பூர் மாநாகர் மன்றத்தின் சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் துறையின் துணை இயக்குனர் டாக்டர் Nor Halizam Ismail தலைமையில் நடத்தப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் அந்த தொழிற்சாலைகள் கோழிகளை அறுப்பதற்கான அனுமதி சான்றிதழ் மற்றும் ஹலால் சான்றிதழ்களையும் கொண்டிருக்கவில்லை.
அதோடு அந்த தொழிற்சாலைகள் தூய்மையற்ற நிலையில் செயல்பட்டதோடு டைபாய்ட் தடுப்பூசியை போடாத வெளிநாடுகளின் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த தொழிற்சாலைகளின் கழிவு நீரும் , கோழிகளின் இரத்தங்களும் நேரடியாக பொது கால்வாய் முலம் வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் எட்டு குற்றப் பதிவுகளும் விநியோகிக்கப்பட்டதாக டாக்டர் Nor Halizam Ismail தெரிவித்தார்.
