29 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

விமானப் படையின் விமானம் சுபாங் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது

🔊To listen to this news in Tamil, Please select the text.

அரச மலேசிய விமானப் படையின் Beechcraft B200T விமானம் இன்று சுபாங் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. நான்கு உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்று காலை மணி 11.27 அளவில் சுபாங் விமானப் படைத் தளத்தை விட்டு அந்த விமானம் புறப்பட்டது. நண்பகல் ஒரு மணியளவில் அதன் விமானி அவ்விமானத்தை கட்டாயமாக அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார். இந்த சம்பவத்தில் அந்த விமானத்திலிருந்த அனைவரும் காயம் எதுவுமின்றி உயர்தப்பினர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரச மலேசிய விமானப் படை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. இதனிடேயே இன்று நண்பகல் மணி 1.15 முதல் மாலை மணி 4.15 அளவில் சுபாங் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. விமான ஓடும் தளத்திலிருந்து நழுவிய அந்த விமானத்தை அப்புறப்படுத்துவதற்காக விமான நிலையம் மூடப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles