27.8 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

டோக்கியோவில் தீப்பிடித்த விமானத்தின் பயணிகள் பட்டியலை விஸ்மா புத்ரா கோரியுள்ளது!

🔊To listen to this news in Tamil, Please select the text.

டோக்கியோவில் தீப்பிடித்த விமானத்தின் பயணிகள் பட்டியலை விஸ்மா புத்ரா கோரியுள்ளது.

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் நேற்று விமான விபத்து நடந்தது.

இந்த விபத்தில் 5 பேர் மரணமடைந்த வேளையில் 300க்கும் அதிகமான பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் மலேசியர்கள் யாரும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்து விஸ்மா புத்ரா தகவல்களை தேடி வருகிறது.

இந்தச் சம்பவத்தில் மலேசியர்கள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அமைச்சு உரிய உதவிகளை வழங்கும்.

தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள்  20-16 Nanpeidai-cho, Shibuya-ku எனும் முகவரியில் உள்ள தூதரகத்திற்கு செல்லலாம். அல்லது 150-0036 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் http://mwtokyo@kln.gov.my மற்றும் http://Consular.typ@kln.gov.my ஆகியவற்றுக்கு மின்னஞ்சலும் அனுப்பலாம் என்று விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles