
🔊To listen to this news in Tamil, Please select the text.
துபாய் சதித்திட்டம் மீதான பேச்சுக்களில் தாம் கலந்து கொண்டதாக கூறப்படுவதை கெடா மந்திரிபுசார் டத்தோஸ்ரீ முஹம்மட் சனுசி முஹம்மத் நோர் மறுத்துள்ளதோடு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து நீடிக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஒற்றுமை அரசாங்கத்திற்கு அண்மையில் பெர்சத்து கட்சியை சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் கட்சி தாவலுக்கு எதிரான சட்டத்தில் பலவீனங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசாங்கத்தைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுப்பதில் பெரிக்காதான் நேஷனல் வெற்றி பெற்றால் அக்கட்சியை பக்காத்தான் ஹராப்பான் குறைகூறக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
இப்போதைக்கு தாம் எந்தவொரு விவகாரத்தையும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்று அலோர் ஸ்டார், விஸ்மா டாருல் அமான்னில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முஹம்மட் சனுசி தெரிவித்தார்.
