25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தைப்பூசத்திற்கு கெடாவில் நிரந்தரமாக பொது விடுமுறையை நிர்ணயிக்கும்படி கோரிக்கை

🔥 Views : 8
👁 Reading Now : 44

🔊To listen to this news in Tamil, Please select the text.

கெடா அரசாங்கம் தைப்பூசத்திற்கு நிரந்தரமான ஆண்டு பொது விடுமுறையை நிர்ணயிக்க வேண்டுமென ‘MIPP’ எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இம்மாதம் 25-ஆம் தேதி நடைபெறும் தைப்பூசத்திற்கு கெடா மந்திரிபுசார் விழாக்கால விடுமுறையை வழங்கியதைத் தொடர்ந்து மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.சுப்ரமணியம் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.

தைப்பூசத்திற்கு நிரந்தரமான ஆண்டு பொது விடுமுறையை நிர்ணயித்தால் ஆண்டுதோறும் தைப்பூச விழா நெருங்கும்போதெல்லாம் அவ்வப்போது ஏற்படும் விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கமுடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதோடு இந்த ஆலோசனையானது இஸ்லாம் அல்லாத விவகாரங்களை திறமையாக நிர்வகிப்பதற்கான கெடா அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தும் நோக்கத்தை கொண்டதாகவும் இருக்கமுடியும் என சுப்ரமணியம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles