25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

அம்பாங்கில், போலீஸ் அதிகாரியை போல பாவனை செய்து, ரோந்து பணியில் ஈடுபட்ட ஆடவன் கைது

🔊To listen to this news in Tamil, Please select the text.

தலைநகர், பண்டான் ஜெயாவில், போலீஸ் அதிகாரியை போல “வெஸ்ட்” அணிந்து, ரோந்து பணியில் ஈடுபட்டதாக நம்பப்படும் உள்நாட்டு ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.

புத்தாண்டு தினத்தன்று அதிகாலை மணி 1.45 வாக்கில் அவ்வாடவன் கைதுச் செய்யப்பட்டதை, அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் அசாம் இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த 27 வயது ஆடவன், போலீஸ் அடையாள அட்டையை காண்பிக்க தவறியதை தொடர்ந்து கைதுச் செய்யப்பட்டான்.

அவனிடமிருந்து, மோட்டார் சைக்கிள், சாவிக் கொத்து, போலீஸ் என பதிக்கப்பட்ட வெஸ்ட் அங்கி உட்பட அடையாள அட்டை ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.

கட்டுமான தொழிலாளியான அவ்வாடவன் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles