31.6 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

பக்கத்தான் மலாய்-சீன அமைச்சர்கள் இந்தியர்களுக்காக அமைச்சரவைக் கூட்டங்களில் குரல் கொடுப்பதில்லை!

🔥 Views : 26
👁 Reading Now : 70

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோலாலம்புர், மார்ச் 26:
அமைச்சர்கள் இரகசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு(OSA-1972) கட்டுப்பட்டவர்கள் என்பதால், அமைச்சரவைக் கூட்டங்களில் பக்கத்தான் கூட்டணியைச் சேர்ந்த மலாய்-சீன அமைச்சர்கள் இந்திய சமுதாயத்துக்காக முன்வைக்கும் கருத்துகள்-வாதங்கள் குறித்து பொதுவில் தெரிவிப்பதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக அண்மையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவும் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட கருத்தில் வேறுபடுவதாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மாட்சிமைக்குரிய மாமன்னரின் முன்பு, அமைச்சராக பதவி ஏற்பவர்கள், இரகசிய காப்பு பிரமான உறுதிமொழியையும் ஏற்கின்றனர் என்பதில் சந்தேகம் இல்லைதான்.

அதேவேளை அரசாங்க முன்னெடுப்பு, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைப் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்பதை யெல்லாம் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதை இந்த இரகசியக் காப்பு பிரமானத்துடன் இணைத்து குழப்பக்கூடாது.

அமைச்சரவைக் கூட்டங்களில் அமைச்சர்கள் முன்வைக்கும் மக்கள் பிரச்சினைகள் குறித்து வெளியில் தெரிவிப்பதை இந்தச் சட்டம் தடுக்கவில்லை.

உதாரணத்திற்கு நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின்போது,சில சட்டமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட சிலரும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்றுகூறி ‘சொஸ்மா’ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டபோது, இந்த விவகாரம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசுவேன் என்று நான் பகிரங்கமாக தெரிவித்ததைக் குறிப்பிடலாம்.

இன்னொரு அண்மைக்கால உதாரணத்தையும் குறிப்பிடலாம். அது, அமைச்சரவை முடிவு குறித்து பிரதமர் அன்வார் இப்ராகிம் வெளியிட்ட அறிவிப்பாகும். மலாய் ‘அஜெண்டா’வை நிறைவேற்ற அரசு இயந்திரத்தின் மூலம் உதவும்படி சிவில் ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்னும் அறிவிப்புதான் அது.

1972 இரகசியக் காப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு விவாதம் குறித்தும் இரகசியம் காக்கப்பட வேண்டுமென்றால், பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே தொடர்பே இருக்காது. மக்களுக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்தும் சமுதாயம் அறியாமல் போகும் என்று முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எனவே, இந்திய சமுதாயத்திற்காக பக்காத்தான் மலாய்-சீன அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் பேசுவது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க இயலாது என்று கணபதி ராவ் குறிப்பிட்டிருப்பது சரியல்ல.

மொத்தத்தில், நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த மலாய்-சீன அமைச்சர்கள், அமைச்சரவைக் கூட்டங்களில் இந்திய சமுதாயத்திற்காக வாய் திறப்பதில்லை என்று ஹிண்ட்ரா பேரியக்கத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles