29.5 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும், கண்காணிக்கும் அமலாக்கம் குறித்த சிறப்பு நடவடிக்கை குழு அடுத்த வாரம் தோற்றுவிக்கப்படும்: தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் உறுதி 

🔊To listen to this news in Tamil, Please select the text.

சமூக ஊடகங்களைக் கட்டுபடுத்தவும், கண்காணிக்கவும் அதற்கான அமலாக்கம் குறித்த சிறப்பு நடவடிக்கை குழு ஒன்று அடுத்த வாரம் தோற்றுவிக்கப்படும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார் 

இந்த சிறப்பு நடவடிக்கை குழுவில் தொடர்பு அமைச்சு, உள்துறை அமைச்சு, பிரதமர் துறைக்கான சட்ட விவகாரங்கள் துறை, பிரதமர் துறை மற்றும் தேசிய சட்டதுறை அலுவலகம் ஆகியவை இடம்பெறும் என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார். 

எம்.சி.எம்.சி தலைவரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்த பின் இந்த விவகாரம் குறித்து முடிவு செய்யப்பட்டது என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் விவரித்தார். 

முன்னதாக, இணையப்பகடிவதையால் தற்கொலை செய்துக்கொண்டு உயிரை மாய்த்து கொண்ட சமூக ஊடக பிரபலம் ராஜேஸ்வரி  எனும் ஈஷாவின் தாயாரான புஷ்பாவைச் சந்தித்து நிதி தொகையை அளித்தார். 

இணையப்பகடிவதையால் பாதிக்கப்பட்ட ஈஷா கடந்த ஜூலை 5ஆம் தேதி ஸ்தாப்பாகில் உள்ள ஆடம்பர அடுக்ககத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles