33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

அதிகாரமோ பதவியோ இல்லாவிட்டாலும்கூட, மலேசிய இந்திய சமுதாயத்தின் நலம் நாடுகின்ற ஒரே அரசியல் இயக்கம் ம.இ.கா!

மஇகா-வின் 78-ஆவது தேசியப் பேராளர் மாநாடு இன்று செப்டம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் ஐடிசிசி அரங்கத்தில் நடைபெற்றபோது, தலைமை உரை ஆற்றிய அவர், மலேசிய இந்திய சமுதாயத்தின் நலனுக்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கும் இந்த மாபெரும் இயக்கம், நாட்டின் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப ஒற்றுமை அரசுடன் ஒருங்கிணைந்து பயணிக்கிறது என்றார்.

அதிகாரமோ பதவியோ இல்லாவிட்டாலும்கூட, மலேசிய இந்திய சமுதாயத்தின் நலம் நாடுகின்ற ஒரே அரசியல் இயக்கம் ம.இ.கா. என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகா-வின் 78-ஆவது தேசியப் பேராளர் மாநாடு இன்று செப்டம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் ஐடிசிசி அரங்கத்தில் நடைபெற்றபோது, தலைமை உரை ஆற்றிய அவர், மலேசிய இந்திய சமுதாயத்தின் நலனுக்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கும் இந்த மாபெரும் இயக்கம், நாட்டின் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப ஒற்றுமை அரசுடன் ஒருங்கிணைந்து பயணிக்கிறது என்றார்.

தொடர்ந்து அம்னோ தலைவரும் தேசிய முன்னணி தலைவம் மடானி அரசின் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

மிகவும் நட்பாகவும் கலகலப்பாகவும் அதேவேளை பொருள்பொதிந்த கருத்துக்களை உள்ளடக்கிப் பேசிய ஹமிடியை மஇகா பேராளர்கள் அடிக்கடி கரவொலி எழுப்பி அவரை மேலும் உற்சாகப் படுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles