25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்

🔥 Views : 9
👁 Reading Now : 26

🔊To listen to this news in Tamil, Please select the text.

மக்கோத்தா இடைத்தேர்தலை முன்னிட்டு தேசிய கூட்டணி அதன் தேர்தல் வாக்குறுதிகளை எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கவுள்ளது என்று அக்கூட்டணியின் தகவல் பிரிவு தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் அஸ்மின் அலி கூறினார். 

தேசிய வாக்குறுதிகள் தொடர்பான தயார்நிலைகள் இறுதி கட்டத்தில் உள்ளதால் அது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக அஸ்மின் அலி விளக்கமளித்தார். 

தேசிய கூட்டணியின் தலைமைக்கு தேர்தல் வாக்குறுதிகள் அனுப்பப்பட்டு இணக்கம் பெற்ற பின் முறையாக அறிவிக்கப்படும். 

மக்கோத்தா சட்டமன்றம் ஜொகூர் மாநிலத்தில் சிறிய சட்டமன்றமாக பார்க்கப்பட்டாலும் அது தேசிய கூட்டணிக்கு பக்கபலமாக உள்ளது என்று அவர் கூறினார். 

மக்களின் பிரச்சனைகளை எங்கள் கட்சி பிரதிநிதி ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் குரல் எழுப்புவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles