26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

வேட்டையின் திரைப்படத்தின் சிறப்பு காட்சி!

🔥 Views : 7
👁 Reading Now : 70

செய்தி / படங்கள் : எம்.முருகன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று புக்கிட் பிந்தாங் ஜிஎஸ்சி திரையரங்கத்தில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சிக்கு பிரபல தொழில் அதிபர் டத்தோ அப்துல் மாலிக் வருகை தந்து ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவரை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் அப்புக்கா வரவேற்றார். இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அது மட்டுமின்றி பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், மலையாள நடிகை மஞ்சு வாரியார், பகத் பாசில் போன்றவரும் தங்கள் சிறப்பான நடிப்பினை வெளியிட்டுள்ளனர். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான காட்சிகளுடனும் அனிருத்தின் சிறந்த பின்னணி இசையுடனும் வெளிவந்துள்ளது. மலேசியாவில் இத்திரைப்படத்தை 3 டாட் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles