24.7 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

தீபாவளியை பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம் – அமைச்சர் கோபிந்த் சிங்!

🔥 Views : 23
👁 Reading Now : 66

கோலாலம்பூர் அக் 15-
நாட்டில் புகழ்பெற்ற லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் லெபோ அம்பாங்கில் தீபாவளி கலை விழா நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.

கொட்டும் மழைக்கிடையே இந்த தீபாவளி கலை விழா தங்கு தடையின்றி நடைபெற்றது.

மண்ணின் மைந்தர்கள் என்று வர்ணிக்கப்படும் லோக்காப் இசை கலைஞர்களின் விறுவிறுப்பான பாடல்கள் பொதுமக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இரவு எட்டு மணிக்கு மேல் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என் கோபாலகிருஷ்ணன், அதன் துணை செயலாளர் ஞானசம்பந்தன், மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்யா சுதாகரன், லெம்பா பந்தாய் கெஅடிலான் மகளிர் அணி தலைவி ஷிலா, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், வழக்கறிஞர் மனோகரன் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாண்டும் வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டதாக லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் செயலாளர் இராஜன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles