
🔊To listen to this news in Tamil, Please select the text.
செய்தி : சஞ்சு / படங்கள் : எம்.முருகன்
மை பிபிபி கட்சியின் ஏற்பாட்டில் வரும் 16ஆம் தேதி முதல் தினசரி இலவச குடிநீர் வழங்கும் திட்டமும் வாராந்திர இலவச உணவு வழங்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளதாக கட்சியின் தலைவர் டத்தோ லோக பாலா தெரிவித்தார். இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் ஒன்பதாவது உச்ச மன்ற கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டார். மை பி பி கட்சியின் ஒரு புதிய முயற்சியாக இந்த திட்டம் அமையும். மக்களுக்கு பல சேவைகளை செய்து வரும் இக்கட்சி அதன் தொடர்ச்சியாக இந்த புதிய முயற்சியையும் கையில் எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் கோலாலம்பூர் கம்பு அத்தாப்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தின் முன் சுத்தமான இலவச குடிநீர் இயந்திரம் பொருத்தப்படவுள்ளது. அங்கு வருகை தரும் மக்களுக்காகவும் சுற்றுலா பயனுக்காகவும் இந்த இலவச குடியிருப்பு திட்டம் பெரிதும் உதவும். அதேபோல் வாராந்திர இலவச உணவு வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட உள்ளது. மேலும் மலேசிய இந்திய மாணவர்களின் பல்கலைக்கழக கோட்டா முறையில் இந்தியர்களுக்கு அதிக இடம் கிடைக்க மை பி பி பிக்கட்சி தொடர்ந்து பிரதமரை வலியுறுத்தும் எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்
