34.8 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

புகைப்படக் கலைஞர் முருகன், டாக்டர் சித்ரா தேவிக்கு சிறப்பு மரியாதை!

🔥 Views : 2,509
👁 Reading Now : 61

புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் முருகன், கோலாலம்பூர்–சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் உதவித் தலைவராக அண்மையில் வெற்றி பெற்ற டாக்டர் சித்ரா தேவிக்கு அண்மையில் சிறப்பு மரியாதை செலுத்தினார்.

தொழிலதிபர் டத்தோ ராமநாதன் செட்டியாரின் குடும்பத் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்த டாக்டர் சித்ரா தேவிக்கு இந்த சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் மலையாண்டி, கோலாலம்பூர்–சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்க உறுப்பினர்களான டாக்டர் நவமணி, டாக்டர் மரியா ரூபினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் புகைப்படக் கலைஞர் முருகன் அன்புடன் வரவேற்று கௌரவித்தார். இந்நிகழ்வு மலேசியா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூகப் பிரமுகர்களிடையே நல்லுறவை மேலும் வலுப்படுத்தியதாகக் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles