27.7 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

மலேசியத் தமிழர் சமூக பண்பாட்டு நட்புறவு பயணம் இனிதே தொடங்கியது!

🔥 Views : 4,166
👁 Reading Now : 45

செய்தி / படங்கள் : எம்.முருகன்
மலேசியத் தமிழர் சமூக பண்பாட்டு நற்புறவு பயணம் மிகவும் விமரிசையாக தொடங்கியது .

டத்தோ கோபாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி. மணிவாசகம் தலைமையில் 14 பேர் அடங்கிய மலேசியத் தமிழர் பேராளர்கள் வெற்றிகரமாக சென்னை வந்து சேர்ந்தனர்.

பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தலைவர் ஸ்டார் மணியம் மற்றும் பிரபல கவிஞர் சீராகியும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மலேசிய – இந்திய குறிப்பாக தமிழகம் – மலேசியத் தமிழர்கள் இடையே தொப்புள் கொடி உறவை மேலும் வலுப்படுத்தும் இலக்கில் இந்த பயணம் அமைந்துள்ளது.

இன்று காலை மலேசியாவில் இருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மணிவாசகம் மற்றும் இந்த பயணத்திற்கு தலைமை ஏற்றுள்ள டத்தோ
கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்த போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது.

இந்த குழுவில் இடம் பெற்ற ஸ்டார் மணியம், ராதாகிருஷ்ணன், ராஜீவ் குமார், லாவண்யா, ஜீவானந்தன் , மலர்விழி, ராஜேந்திரன், ராமசாமி சங்கர், ராயன் ரவி, முனிசாமி, பாஸ்கரன், கிருஷ்ணன், டாக்டர் கருப்பன் பிள்ளை, முனியாண்டி, கரூர் சுப்பிரமணியம் , பாஸ்கரன், கிருஷ்ணன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

இந்தப் பயணத்தை சிறப்பாக வழி நடத்தி ஏற்பாடுகளை செய்த பிரியா டிராவல்ஸ் இயக்குனர் பிரியா குமாரி அவரது உதவியாளர் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நக்கீரர் தமிழ் சங்கத்தின் தலைவர் பத்திரிக்கை ஆசிரியர் பாஸ்கரன் அனைவருக்கும் சிறப்பு செய்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles