29.4 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

டத்தோ இராமநாதன் செட்டியார் புதல்வி திருமணம் விமரிசையாக நடைபெற்றது!

🔥 Views : 4,228
👁 Reading Now : 25

செய்தி/படங்கள்: எம் முருகன்
மலேசிய நகரத்தார் வர்த்தக தொழில் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர்.இராமநாதன் – டத்தின் மீனாட்சி ஆச்சி தம்பதியரின் அன்பு புதல்வி அம்பிகா மீனாட்சி மற்றும் பினாங்கு தேவராயன் செட்டியார் -வள்ளி ஆச்சி தம்பதியரின் அன்பு புதல்வர் சுப்பையா தேவராயன் இனிய திருமணம் இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தமிழ் நாடு காரைக்குடி திருமயம் விரையாச்சிலை ஆர்.எம்.ஆர் இல்லத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு மேல் இனிதே திருமணம் நடைபெற்றது.

தமிழ் நாடு திருமயம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி முக்கிய பிரமுகராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இரு வீட்டார் சார்பில் உறவினர்கள் குடும்ப நண்பர்கள் பெரும் அளவில் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

குறிப்பாக மலேசிய உட்பட பல நாடுகளில் இருந்து பிரமுகர்கள் திருமண விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டி, முருகன் ஆகியோரும் திருமண விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles