28.5 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

முன்னாள் நிதி அமைச்சர் துன் டாய்ம் ஜைனுடின் காலமானார்!

🔥 Views : 9
👁 Reading Now : 29

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடின் இன்று காலமானார். இதனை துன் டாய்மின் வழக்கறிஞர் குர்டியால் சிங் நிஜார் உறுதிப்படுத்தினார். 86 வயதுடைய துன் டாய்ம் உடல் நலக்குறைவால் பெட்டாலிங்ஜெயா அசுந்தா மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் இன்று மரணமடைந்தார். துன் டாய்ம் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை நிதி அமைச்சராகவும் 1999 முதல் 2001ஆம் ஆண்டு வரை இரண்டாவது துணையமைச்சராகவும் பணியாற்றினார்.முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தலைமையின் கீழ் ஆசிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க  மீண்டும் பணிக்கு திரும்பினார். அதே வேளையில் தனது இறுதி காலக்கட்டத்தில் பல நீதிமன்ற வழக்குகளையும் அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles