27.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

‘இஸ்கான்’ அமைப்புக்கு தடை; வங்கதேசம் கோர்ட்டில் மனு

🔥 Views : 25
👁 Reading Now : 20

டாக்கா, வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவரை விடுவிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அங்கு, ‘இஸ்கான்’ அமைப்பை தடை செய்யக்கோரி, அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள, ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், ‘இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி.

கடந்த மாதம் 30ம் தேதி ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாசை சமீபத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

சிட்டங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிருஷ்ண தாசை, போலீசார் அழைத்து வந்த போது, அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை போலீசார் கலைத்தனர்.

ஹிந்து அமைப்பினர் மீது வங்கதேச போலீசார் தடியடி
இந்த போராட்டத்தின் போது நடந்த தாக்குதலில் சைபூல் இஸ்லாம் என்ற வழக்கறிஞர் கொல்லப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles