27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

படிவம் 4 வரலாற்று பாடப்புத்தகத்தில்பிபிபி கட்சியின் தகவல்களை கல்வி அமைச்சு சரி செய்ய வேண்டும்!

கோலாலம்பூர் டிச 1-
நாட்டில் உள்ள படிவம் 4 வரலாற்று பாடப்புத்தகத்தில் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தோற்றுவிக்கப்பட்ட கட்சிகளின் பெயர்களையும் அதன் தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

அந்த வகையில் 1953 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சியின் பெயரும் இடம் பெற்றுள்ளது பெருமைக்குரியது.

ஆனால் இந்த பாடப்புத்தகத்தில் பிபிபி கட்சியை தோற்றுவித்தவர்களின் பெயர்களும் தேதியும் தவறுதலாக இடம் பெற்றுள்ளது என்று பிபிபி கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.

முதலில் பேராக் பிபிபி கட்சியை தோற்றுவித்தவர் கள் எஸ்.கனகரத்தினம் பிள்ளை மற்றும் பிரபல வழக்கறிஞர் டி.ஆர். சீனிவாசகம் அவர்கள்.

ஆனால் வரலாற்று பாடப்புத்தகத்தில் டாக்டர் எஸ்.கணபதிபிள்ளை மற்றும் டாக்டர் சீனிவாசகம் ஆகியோர் பிபிபி கட்சியை தோற்றுவித்தவர்கள் என்று இடம் பெற்றுள்ளது தவறாகும்.

அதேபோல் முதலில் பேராக் பிபிபி கட்சி 10-4-1953 இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

பின்னர் 1956 இல் பிபிபி கட்சி தேசிய அளவில் தோற்றுவிக்கப்பட்டது.

ஆனால் பாடப்புத்தகத்தில் ஜனவரி 1953 என்று இடம் பெற்றுள்ளது தவறாகும்.

இதை இரண்டையும் கல்வி அமைச்சு சரி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles