27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

கிம்மாவின் தேசிய பேராளர் மாநாடு!

கிம்மாவின் தேசிய பேராளர் மாநாடு புத்திர உலக வாணிப மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு சிறப்பு வருகையாக அம்னோவைச் சேர்ந்த டாக்டர் அஷ்ரப் வாட்ச்டி சிறப்பு வருகை புரிந்து மாநாட்டை தொடக்கி வைத்தார். இம்மாநாட்டில் 1500 பேராளர்கள் கலந்து கொண்டனர். டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் பேசும் போது கிம்மா அதிகமான பேராளர்களை கொண்ட இயக்கம் ஆகும். இன்று 1500 க்கும் மேற்பட்ட பேராளர்கள் நாடு முழுவதிலும் வந்துள்ளனர்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் துணை பிரதமர் சைட் ஹமிடி வர முடியவில்லை. இருந்தாலும் இந்த மாநாடு மிகச் சிறப்பாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடு தழுவிய நிலையில் B 40 ஏழைகளுக்கு கிம்மா அடையாளம் கண்டு அவர்களை தேடி உதவி செய்து வருகிறது. இந்த அரசாங்கத்திற்கு எப்பொழுதும் வற்றாத ஆதரவை வழங்கியுள்ளது.

மேலும் நாங்களும் இந்த நாட்டின் பூமிபுத்ராக இருக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இந்த நாட்டு அடையாளமாக பூமிபுத்ராவாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து வந்து சில பேர் இங்கே தங்கி எல்லாத்தையும் துறந்து இங்கே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசாங்கம் உஉதவி செய்ய வேண்டும் என்கிறார். இந்நிகழ்வில் சாதனை புரிந்த தொழில் வல்லுனர்களுக்கு நினைவு பரிசும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது. இதில் டத்தோ ஹமீத், டத்தோ அப்துல் மாலிக், டத்தோ லோக பாலா, டத்தோ ஸ்ரீ தனேந்திரன், அலி ஜின்னா மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles