
அமைச்சரவையில் இருந்து இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவை பிரதமர் நீக்க வேண்டும்.
பெர்சத்து கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் இதனை கூறினார்.
முன்னாள் போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹாசனுக்கு எதிராக ஹன்னா இயோ வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந் அவதூறு வழக்கை கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் முடிவு மற்றும் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை பிரதமர் எடுக்க வேண்டும்.
அதே வேளையில் மலேசியாவை ஒரு கிறிஸ்தவ நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளுடன் தொடர்புடைய அவரது புத்தகமான பிகமிங் ஹன்னா எனும் புத்தக விவகாரம் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தீர்க்கமாக முடிவை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
