28 C
Kuala Lumpur
Tuesday, August 11, 2026

Vetri

ஒலிம்பிக் போட்டியில் மலேசியா பங்கேற்க தடையா?

🔥 Views : 30
👁 Reading Now : 33

நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக அடுத்த மாதம் தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மலேசியா உள்ளிட்ட பத்து நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலை 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஏற்பாட்டுக் குழுவின் தலைமை செயல்முறை அதிகாரி தோஷிரோ மறுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தடை விதிப்பதற்கான சாத்தியத்தைக் கூட தாங்கள் பரிசீலிக்கவில்லை என அவர் கூறினார்.
எனினும், அடுத்த மாதம் 23ஆம் தேதி நடைபெறும் அந்த போட்டியில் பங்கேற்க ஜப்பான் வருவதற்கு முன்னர் விளையாட்டாளர்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் என சில நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டதாகச் சொன்னார்.
சில நாடுகளுக்கு தடை விதிப்பது தொடர்பான விஷயத்தை நாங்கள் கேள்விப்படவேயில்லை. இது முற்றிலும் அடிப்படையற்ற தகவலாகும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles