25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன்: சொல்கிறார் பைடன்

” அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு இருந்தால், டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன்,” என தற்போதைய அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவ., மாதம் நடந்தது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் களமிறங்கினார். ஜனநாயக கட்சி சார்பில், முதலில் ஜோ பைடன் களத்தில் இருந்தார். ஆனால், வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களினால் அவர் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் துணை அதிபர் கமலா ஹாரீஸ் போட்டியிட்டார். ஆனால், இத்தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். வரும் 20ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அதிபர் பைடன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன் என நம்புகிறேன். அதற்கான சிறந்த வாய்ப்பு என்னிடம் இருந்ததாக நினைக்கிறேன். ஆனால், 86 வயதாகும் நிலையில், மீண்டும் அதிபர் ஆக வேண்டும் என நான் விரும்பவில்லை. இதனால், போட்டியில் இருந்து ஒதுங்கினேன். 86 வயதாகும் நான், அடுத்து என்ன செய்யப்போகிறேன் என யாருக்கும் தெரியாது.

தேர்தல் வெற்றிக்கு பிறகு ஓவல் அலுவலகத்தில் என்னை சந்தித்த டிரம்ப்பிடம், அரசியல் எதிரிகளை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டாம் என அவரிடம் கூறினேன். ஆனால், அதற்கு டிரம்ப் எந்த பதிலும் கூறவில்லை. இவ்வாறு பைடன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles