33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

பள்ளிக் கட்டமைப்புகளை சரிசெய்வதற்காக RM1 மில்லியன் ஒதுக்கீடு – எம்பிஐ

🔥 Views : 8
👁 Reading Now : 56

இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டமைப்புகளை சரிசெய்வதற்காக எம்பிஐ, RM1 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதி மாணவர்களின் கற்றல் தரத்தையும் வசதிகளையும் மேம்படுத்த வழங்கப்படுகிறது என எம்பிஐயின் தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் கூறினார்.

“ஒவ்வொரு ஆண்டும் எம்பிஐ அறக்கட்டளை பள்ளி உள்கட்டமைப்பு பழுதுபார்ப்பு நடவடிக்கை உள்ளிட்ட கல்வி மேம்பாட்டு திட்டங்களுக்கு சிறப்பு ஒதுக்கீடுகளை வழங்குகிறது.

“இந்த ஆண்டு வசதிகளை மேம்படுத்த வேண்டி பள்ளிகளுக்கு மொத்தம் 1 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படும். இந்த உதவி மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறேன்,” என அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

நேற்று, கிள்ளான் சுற்றுவட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பள்ளிகளுக்கு RM50,000 மதிப்பிலான உள்கட்டமைப்பு பழுதுபார்ப்பு நிதி உதவியை யாயாசான் எம்பிஐ,வழங்கியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles