29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

எட்டு நாட்களுக்கு மொத்த குப்பை அகற்றும் சேவை

ஜனவரி 20 முதல் எட்டு நாட்களுக்கு தரை வீடு கொண்டிருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு மொத்த குப்பை அகற்றும் சேவையை சுபாங் ஜெயா மாநகராட்சி வழங்குகிறது.

இந்த சேவை சீன புத்தாண்டை முன்னிட்டு KDEB கழிவு மேலாண்மை
உடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என பெருநிறுவன மற்றும் மூலோபாய மேலாண்மை துறை தெரிவித்துள்ளது

அனைத்து எம்பிஎஸ்ஜே நிர்வாகப் பகுதிகளிலும் இந்தச் சேவை ஜனவரி 20ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மொத்த குப்பை அகற்றும் திட்டத்தில் மெத்தைகள், பழைய தளவாடப் பொருட்கள் ஆகியவை மட்டுமே அடங்கும்

வீட்டை சீரமைக்கும் போது பயன்படுத்தி பொருட்கள், வீடு மாறும் போது அகற்றும் பொருட்கள் மற்றும்  மின்சார பொருட்கள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படாது என வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சேவைக்கு 03-80814437 என்ற எண்ணிலோ அல்லது 011-35384437 என்ற வாட்ஸ்அப் செயலி மூலமாகவோ ஜனவரி 13 முதல் ஜனவரி 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று பிபிடி தெரிவித்துள்ளது.

தேதியை நிர்ணயம் செய்ய விண்ணப்பதாரர்களை KDEBWM தொடர்பு கொள்ளும். மேலும், மொத்த குப்பைகளைக் குடியிருப்பாளர்கள் வீட்டின் முன் வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles