28 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள பாழடைந்த வணிகப் பகுதிகளை மேம்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்

🔥 Views : 11
👁 Reading Now : 48

தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள பாழடைந்த வணிகப் பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டார்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் ஜாலான் மஸ்ஜித் இந்தியா சுற்றுப்பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

மேலும், ஜாலான் மஸ்ஜித் இந்தியா பல ஆண்டுகளாக ஒரு சுற்றுலா தலமாக விளங்கிய நிலையில், அங்குள்ள பல வணிகப்பகுதிகள் மோசமான நிலையில் பாழடைந்து காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா அதிக போக்குவரத்து நிறைந்த பகுதி என்றும் கூடிய விரைவில் சுற்றியுள்ள வணிகப் பகுதிகளையும் கடைகளையும் மேம்படுத்தும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles