26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ஏட்டுக் கல்வியுடன் திவேட் துறையிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்: டத்தோ மோகன்

🔥 Views : 11
👁 Reading Now : 69

ஏட்டுக் கல்வியுடன் திவேட் துறையிலும் நமது மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி.மோகன் கூறினார்.

ரோபோடிக், கோடிங்  துறை தொடர்பான சிறப்பு நிகழ்வு இன்று பூச்சோங்கில் நடைபெற்றது.

மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் சிலாங்கூர் மாநில செயலாளர் சசிதரன் பரமசிவம், ஐகியூ ரோபோடிக் தலைமை இயக்குநர் டாக்டர் ஸ்ரீநாத் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

காலையிலேயே அதிகமான பெற்றோர்களும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது.

குறிப்பாக இதில் பங்கேற்றவர்களில் அதிகமான மாணவர்கள் தமிழ்ப்பள்ளியை சேர்ந்தவர்களாவர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ரோபோட்டிக், கோடிங் உட்பட பல துறைகளில் சாதிப்பது மிகவும் பெருமையாக உள்ளது.

தமிழ்ப்பள்ளிகளில் தான் இது போன்ற துறைகளில் மாணவர்கள் ஈடுபட அதிகம் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே வேளையில் விளையாட்டுத் துறையிலும் நம் மாணவர்கள் பெரிய அளவில் சாதிக்கின்றனர்.

ஆகவே நமது பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை கண்டிப்பாக தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.

இதுவே எனது வேண்டுகோள் என்று டத்தோ டி. மோகன் கேட்டுக் கொண்டார்.

உலகமே தற்போது நான்காவது தொழில் புரட்சி, செயற்கை நுண்ணறிவு என பல்வேறு என தொழில் நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்த்து கொண்டிருக்கிறது.

ஆகவே எதிர்கால சவால்களை சமாளிக்க தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன் தீவேட் கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தொழில் திறன் கல்வி எதிர்காலத்தில் நமது பிள்ளைகளின் வெற்றிகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles