25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

மஇகாவின் தைப்பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர், ஜன 15
தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு
மஇகா ஏற்பாட்டில் இன்று தைப்பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த தைப்பொங்கல் விழாவில் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ டி. முருகையா, டான்ஸ்ரீ இராமசாமி, நிர்வாக செயலாளர் டத்தோ டாக்டர் குமாரராஜா, தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன், இளைஞர் அணி தலைவர் அர்விந்த், மகளிர் அணி தலைவி மாண்புமிகு சரஸ்வதி நல்லத்தம்பி, உச்சமன்ற உறுப்பினர்கள் டத்தோ எஸ் எம். முத்து, டத்தோ முனியாண்டி, ஊடக பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம், டத்தோ குணாளன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மலேசிய வாழ் தமிழர்கள் இன்று பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் மஇகாவின் பொங்கல் விழா தலைமையகத்தின் அருகில் உள்ள ஆலயத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. மூன்று பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு பின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles