33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

பத்துமலை நகரும் மின் படிக்கட்டு திட்டத்திற்கு விரைவில் முழு அனுமதி வழங்கப்படும்: டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி

🔥 Views : 6
👁 Reading Now : 70

பத்துமலை நகரும் மின் படிக்கட்டு திட்டத்திற்கு விரைவில் முழு அனுமதி வழங்கப்படும்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

பத்துமலையின் மேல்குகைக்கு செல்ல நகரும் படிக்கக்கட்டு கட்டப்படவுள்ளது. 

இதற்கான பூமி பூஜை சிறப்பான முறையில் நடைபெற்றது.

மேல்குகைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு கைகொடுக்கும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்திற்கு அனுமதி கிடைப்பற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது.

தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

இந்நிலையில் சுங்கை துவாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட மந்திரி புசார் இத்திட்டம் குறித்து பேசினார்.

குறிப்பாக இத்திட்டத்திற்கு முறையாக அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் விரைவில் அத்திட்டத்திற்கு முழு அனுமதி வழங்கப்படும்.

அதே வேளையில் இத்திட்டத்திற்கு தாம் முழு ஆதரவு தருவேன் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles