28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலையை சுற்றி 1,500 போலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவர்: டத்தோ ஹுசைன் ஒமார் கான்!

🔥 Views : 6
👁 Reading Now : 38

தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலையை சுற்றி 1,500 போலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவர்.

சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் இதனை கூறினார்.

பத்துமலையில் தைப்பூச விழா வரும் பிப்ரவரி 11ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. 

இவ்விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் பத்துமலையில் கூடுவார்கள்.

அம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலிஸ் உரிய நடவடிக்கையை எடுக்கும்.

குறிப்பாக சிலாங்கூர் போலிஸ் படையைச் சேர்ந்த மொத்தம் 1,500 அதிகாரிகள், உறுப்பினர்கள் பத்துமலையை சுற்றி பாதுகாப்பு பணியில்  நிறுத்தப்படுவார்கள்.

மேலும் பிப்ரவரி 9ஆம் தேதி  வெள்ளி ரத ஊர்வலத்தில் இருந்து இந்த பாதுகாப்பு பணி தொடங்கும்

இன்று பத்துமலையில் 2025 தைப்பூச கொண்டாட்டத்துடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

காவடி ஏந்துபவர்கள் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஏதேனும் செயலில் ஈடுபட்டால், போலிஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

தைப்பூசம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மலேசிய தன்னார்வத் துறை உறுப்பினர்களும் கோயில் தன்னார்வத் தொண்டு குழுவும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles