
புத்ராஜெயா:
நாட்டில் பல முக்கிய நபர்கள் எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார்கள்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.
நாட்டுல் 9ஆவது பிரதமரின் நான்கு முன்னாள் மூத்த அதிகாரிகள் கைது செய்யப்ப்ட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து விரைவில் எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளிக்க பிரமுகர்கள் உட்பட மேலும் பல நபர்கள் அழைக்கப்படுவார்கள்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சம்பந்தப்பட்ட பல நபர்களை சாட்சிகளாக தனது தரப்பு அழைக்கும்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை விசாரணை அதிகாரிகளால் நடத்தப்பட்டு வருவதாகவும்,
இதுவரை எம்ஏசிசி அதிகாரிகள் பல கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதால் நிச்சயமாக பல நபர்கள் அழைக்கப்படுவார்கள்.
இந்த சாட்சிகள் விரைவில் அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
