
அருள்மிகு ஸ்ரீ பூரணை–புட்கலை சமேத ஸ்ரீ பொய்சொல்லா மெய்ய அய்யனார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம், புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு லோட்டஸ் குழும தலைவர் டான் ஸ்ரீ ரேனா துரைசிங்கம் வருகை தரவுள்ளார்.

இந்த புனித நிகழ்வின் போது, ஸ்ரீ அய்யனாருக்கு மகா கும்பாபிஷேகம், வேத மந்திரங்கள் முழங்க, பக்தி பரவசத்துடன் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, யாக பூஜைகள் சிறப்பாக நடத்தப்படுவதுடன், தினசரி பூஜைகள் முறையாக நடைபெறும். இந்த மகத்தான ஆன்மீக நிகழ்வில், பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, ஸ்ரீ அய்யனாரின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.

