29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

முன்பு Gantian இருந்தது – இப்போது இல்லை! வேலை செய்ய ஆள் இல்லாத திண்டாட்டம்! மிம்தா தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் வேதனை

🔥 Views : 10
👁 Reading Now : 43

மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி கடைகளில் வேலை செய்ய ஆள் இல்லாததால் நாங்கள் பெரும் நெருக்கடியை எதிர் நோக்கி வருகிறோம் என்று மிம்தா தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் வேதனையோடு தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

கடந்த 13 ஆண்டுகளாக நாங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தில் 640 உறுப்பினர்கள் முறையாக லெசென்ஸ் பெற்று கடைகளை நடத்தி வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு முறையாக வரி செலுத்தி வருகிறோம்.

3 டி எனப்படும் கடினமான இந்த துறையில் வேலை செய்ய உள்ளூர் தொழிலாளர்கள் முன் வருவதில்லை.

இந்தியா, நேப்பாளம் மற்றும் வங்காளதேசத் தொழிலாளர்கள் எங்களுக்கு உடனடியாக தேவை படுகிறார்கள்.

குறிப்பாக 10,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

முன்பு ஒரு அந்நியத் தொழிலாளர் நாடு திரும்பினால் அவருக்கு பதிலாக Gantian எனப்படும் மாற்றுத் தொழிலாளர் வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

ஆனால்,இப்போது மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை.

நிலமை இப்படியே போனால் நாங்கள் கடைகளை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்று அவர் வேதனையோடு தெரிவித்தார்.

அந்நிய தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக மனிதவள அமைச்சை பலமுறை சந்தித்து மகஜரை கொடுத்து இருக்கிறோம் என்று மிம்தா பொருளாளர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் விவகாரத்தில் உள்துறை அமைச்சும் சம்பந்தப்பட்டுள்ளது.

இரு அமைச்சும் எங்கள் பிரச்சனையை சீர்த்தூக்கி பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, மிம்தா செயலாளர் முத்தப்பன் கூறுகையில் கட்டுமானத் தொழில் துறை மற்றும் விவசாய துறையில் பணிபுரிய அந்நியத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது.

ஆனால் மறுசுழற்சி துறையில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி மறுக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எங்களுக்கு மட்டும் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள உள்துறை அமைச்சு மற்றும் மனிதவள அமைச்சு அனுமதி மறுப்பது ஏன் என்று அவர் கேள்வியை முன் வைத்தார்.

இன்று கோலாலம்பூர் ஜாலான் கூச்சாய் லாமா மிம்தா அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles