30.2 C
Kuala Lumpur
Thursday, July 10, 2025

Vetri

தென்கொரியாவில் பிரதமர் பதவி நீக்கத்தை ரத்து செய்த கோர்ட்!

தென்கொரியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் வடகொரியாவுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்வதாக முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோல் குற்றம்சாட்டினார். இதனையடுத்து கடந்த ஆண்டு ராணுவ அவசர நிலையை அறிவித்தார்.

இவரது இந்த செயலுக்கு ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அறிவித்த சில மணி நேரத்திலேயே அதனை பின்வாங்கினார்.

எனினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக யூன் சுக்-இயோல் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேறியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே ஹான் டக்-சூ பதவி நீக்கம் தொடர்பான வழக்கு தலைநகர் சியோலில் உள்ள அரசியலமைப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் அவசர நிலை செயல்படுத்திய விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என உறுதியானது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles