
காசா: இஸ்ரேல் வான் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய செய்தித் தொடர்பாளர் அப்துல் லத்தீஃப் கானு கொல்லப்பட்டுள்ளார். வட ஜெபலியா பகுதியில் அவர் தங்கியிருந்த முகாம் குறிவைக்கப்பட்டதாக அல்-அக்ஸா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
🔴 தொடரும் படுகொலை – 830 பேர் பலி
காசா சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, மார்ச் 18 முதல் தொடர் தாக்குதல்களில் 830 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 1,787 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீண்டும் இனப்படுகொலையை நிரூபிக்கிறது என பல சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.