
கோலாலம்பூர் ஜூன் 29-
கடந்த ஆண்டு சிலாங்கூர் சுங்கை பீலேக்கில் மே 24,25 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக சிலம்ப போட்டி அங்கிகாரம் பெற்ற போட்டி என்று மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் எம் சுரேஸ் தெரிவித்தார்.
இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் மலேசிய விளையாட்டு ஆணையம் அனுமதி பெற்று இந்த போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியை நடத்துவதற்கு ஒரு குழுவை அமைத்தோம்.
இந்த அனைத்துலக சிலம்ப போட்டி நடத்துவதற்கு இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு 44, 800 வெள்ளி மானியம் வழங்கியது.
இளைஞர் விளையாட்டு துறை அமைச்சை நம்ப வைத்து மானியம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவராக பதவி ஏற்றது முதல் இதுநாள் வரை எல்லா கணக்கு வழக்கு முறையாக உள்ளது.
அனைத்துலக சிலம்ப போட்டிக்காக இரண்டு லட்சத்து 20,000 வெள்ளியை திரட்டினோம்.
இதில் 2 லட்சத்து 8 ஆயிரம் வெள்ளி செலவானது. இதை முறையாக மலேசிய விளையாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்து விட்டோம்.
இது தொடர்பாக எந்தவொரு விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று டாக்டர் சுரேஸ் தெரிவித்தார்.
மலேசிய சிலம்ப கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் சொன்னார்.
இன்று மெட்ராஸ் காபே உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.