
அண்மையில் மஇகா நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ சரவணன் ம இ காவினால் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு மகத்தான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ம இ கா மீது மக்கள் வலுவான நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது. இந்த இயக்கம் அதிகமான சலுகைகளை உறுப்பினர்களுக்கு வழங்கி உள்ளது. நல்ல திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வெற்றி கொண்டுள்ளது. இந்திய சமுதாயம் நமக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளது என மேலும் தெரிவித்தார்.