
மலேசிய இந்திய உறவு பயணமாக கலைஞர்களுடன் வந்துள்ள டத்தோ கோபாலகிருஷ்ணன் கூறும்போது மலேசியாவில் தமிழ் வாழ்கிறது நாங்கள் இந்தியாவில் இருந்து வந்த கலைஞர்களையும் கவிஞர்களையும் நூல் எழுதியவர்களையும் வரவேற்று யார் வந்தாலும் சிறப்பு செய்து வருகிறோம். ஒரு தொப்புள் கொடி உறவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறேன். அதுபோல எங்கும் எங்கள் கலைஞர்கள் என்றும் திறமையானவர்கள் தமிழக திரைப்பட பாடல்களை பாடினாலும் சிறப்பான முறையில் பாடுகிறார்கள். நான் கலைஞர் இயக்கத்தில் தலைவராக இருப்பதால் அவர்களுக்கு எந்த இடத்திலும் முக்கியத்துவம் கொடுப்பேன்.

நிறைய உதவிகள் செய்வேன். கலைஞர்களை நாம் தான் வாழ வைக்க வேண்டும். அவர்கள் படும் கஷ்டம் கொஞ்சம் நெஞ்சம் இல்லை. அவர்களுக்கு தொழிலே இதுதான். திறமையான கலைஞர்களுக்கு சிறப்பு செய்து விருதுகள் கொடுக்க வேண்டும். அதிகமான கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். அப்படி செய்தால் கலைஞர்கள் போற்றப்படுவார்கள். த தலைமை ஏற்று நடத்திய எஸ்பி மணிவாசகத்திற்கு என் முதல் கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோல இந்த சுற்றுல சுற்றுலா பயணத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த பிரியா டிராவல்ஸ் பிரியாவிற்கும் நிர்வாகி சதீஷ்க்கும் மலேசிய அனைத்து கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



